முட்டாள் செய்த வேலை - ப்ரியா பவானி ஷங்கருடன் காதல் சர்ச்சை குறித்து எஸ்.ஜே.சூர்யா கடுப்பான பதில்..!


நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூரியா நடிகை ப்ரியா பவானி ஷங்கரிடம் காதலை சொன்னதாக சில தகவல்கள் இணையத்தில் வட்டமடித்தன.

மான்ஸ்டர் படத்தில் ப்ரியா பவானி ஷங்கருடன் சேர்ந்து நடித்த எஸ்.ஜே.சூரியா தற்போது, பொம்மை என்ற படத்தில் மீண்டும் ப்ரியா பவானி ஷங்கருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் எஸ்.ஜே.சூரியா தன்னுடன் நடித்த ப்ரியா பவானி ஷங்கருக்கு காதலை கூரியதாவும். ஆனால், அவர் காதலை ஏற்க மறுத்ததாகவும் சில தகவல்கள் பரவின.

இதனால், கடுப்பான எஸ்.ஜே.சூரியா இது யாரே முட்டாள் செய்த வேலை. அவர்கள் தான் இது போன்ற தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ப்ரியா பவானி ஷங்கர் எனக்கு நல்ல தோழி, நல்ல நடிகை. அவ்வளவு தான். இது போன்ற அடிப்படையில்லாத தகவல்களை நம்ப வேண்டாம். நன்றி என கூறியுள்ளார்.