ஆரம்பமாகின்றது "தளபதி 65" படத்தின் ஷூட்டிங் - ஆனால், இயக்குனர் ஷங்கரும் இல்லை, நெருப்பு குமாரும் இல்லை.!


ரசிகர்கள் எல்லோரும் தளபதி64 படமான "மாஸ்டர்" படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்டிருக்கும் போது "தளபதி 65" படத்தின் அப்டேட்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

அதிலும், இப்போது வெளியான அப்டேட் தான் விஜய் ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணம் என்று கூறலாம். ஆம், நடிகர் விஜய் தீபாவளி ரேஸில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என கூறுகிறார்கள்.

அதனை தொடர்ந்து, உடனடியாக தளபதி 65 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் எனவும், அருண்ராஜா காமராஜ் எனவும் செய்திகள் பரவி வந்தன. ஆனால், அதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என கூறுகிறார்கள்.

ஏப்ரல் மாதம் மாஸ்டர் வெளியாகவுள்ள நிலையில் முக்கால் வாசி வருடத்தை சும்மா பாஸ் பண்ண முடியாது என்ற முடிவில் தீர்கமாக உள்ளாராம் விஜய். அதனால், தளபதி 65 படத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் நோக்கில் விஜய் வேலை செய்து வருவதாக கூறுகிறார்கள்.

மாஸ்டர் படத்தை தாயரித்து வரும் விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தான் "தளபதி65" படத்தையும் தயாரிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.இந்த படத்தின் இயக்குனர் யார்..? மற்றும் பல விபரங்கள் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--