தொடை தெரிய ஓவர் கிளாமர் உடையில் கோவிலுக்கு போன பிரபல தொகுப்பாளினி... சரமாரியாக திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்...!


சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் ரம்யா. தற்போது வெள்ளித்திரையிலும் தலை காட்ட தொடங்கியுள்ளார். 

மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் ரம்யா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில், பேண்ட் போடாமல் தொடை முழுவதும் தெரியும் படியான கவர்ச்சி உடையில், மியான்மரில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தியுள்ளார். அதன் பின்னர் கோவிலுக்கு வெளியே தங்களது வேண்டுதல்களை கூறி சிட்டுக்குருவிகளை பறக்கவிடும் வழிபாடு நடத்தியுள்ளார். 


கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி உடையில் ரம்யா, வழிபாடு நடத்திய அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கோவிலுக்கு இப்படித்தான் போவீங்களா?... என சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர்.