நடிகர் விஜய்யா இவ்வளவு மோசமானவரா..? வாடைக்கு கூட வீடு தரவில்லை..! - பிரபல தயாரிப்பாளர் கூறிய தகவல்..!


நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் அவரது தந்தையின் உதவியுடன் தான் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிகர் விஜய்யை வைத்து இரண்டுபடங்கள் எடுத்து அவை தோல்வியடைந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.

அப்போது, என் மகன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றான். நான் வேண்டாம் என்றேன். பெல்டால் அடித்தேன். ஆனால், சினிமாவில் நடிப்பேன் என்று வீட்டை விட்டே வெளியேறிவிட்டான். பிறகு, விஜயின் அம்மா ஷோபா-தான் அவனை சமாதனாம் செய்து அழைத்து வந்தார்.

இப்போது இரண்டு படம் எடுத்து பெரிய நஷ்டம். இரண்டு வீட்டை விற்று விட்டேன். இப்போது, மூன்றாவதாக ஒரு படம் எடுத்துள்ளேன். அந்த படத்தை விற்க வேண்டும். உதவி பண்ணுங்க என்று தயாரிப்பாளர் கலைஞானத்திடம் கேட்டுள்ளார் எஸ்.ஏ.சி.

இப்படி எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதால் அந்த படத்தை பார்த்தோம். அதன்பிறகு ஒரு புதிய படத்தில் விஜய்யை நடிக்கவைக்க தயாரிப்பாளரை நான் தான் அரேன்ஜ் பண்ணிக்கொடுத்தேன். 

அந்த படத்தையும் எஸ்.ஏ.சி-யே இயக்குவதாக முடிவானது. ஆனால், அவரிடம் கதை எதுவும் இல்லாததால் நானே ஒரு புது கதையை கொடுத்தேன்.
அதற்கு, இதுவரை வரை ஒரு ரூபாய் பணம்  கூட தரவில்லை. 

அதன்பிறகு, விஜய் முன்னணி ஹீரோவாகி சென்னையில் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார். ஒரு நாள், எஸ்.ஏ.சி-யிடம் எனக்கு வாடகைக்கு ஒரு வீடு வேண்டும் என கேட்டேன். 

ஆனால், அவர் அதையெல்லாம் விஜய்யும் அவர் மனைவி தான் பார்த்துகிறாங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியாது’ என கூறி மறுத்துவிட்டார்.

ஆனால், தற்போது என்னுடைய நிலைமையை அறிந்த ரஜினி நான் கேட்காமலேயே ஒரு வீட்டை வாங்கி கொடுத்துள்ளார் என கலைஞானம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யா இவ்வளவு மோசமானவரா..? வாடைக்கு கூட வீடு தரவில்லை..! - பிரபல தயாரிப்பாளர் கூறிய தகவல்..! நடிகர் விஜய்யா இவ்வளவு மோசமானவரா..? வாடைக்கு கூட வீடு தரவில்லை..! - பிரபல தயாரிப்பாளர் கூறிய தகவல்..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.