நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார். சமீபத்தில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனை தற்காலிகமானது தான் என்பதால் ஒன்றும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த வைரஸ் தாக்குதலுக்கான தடுப்பு மருந்துகள் மற்றும் குணமாக்கும் மருந்துகள் கண்டு பிடிப்பதில் அறிவியல் அறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் முதற்கட்டமாக, கொரோனா தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை தற்போது நடந்து வருகின்றது. இதற்க்கான, முடிவுகளை அறிந்து கொள்ள உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றது.
சரி விஷயத்துக்கு வருவோம். கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துப்பாக்கி'.
இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. 'துப்பாக்கி' படத்தைத் தொடர்ந்து 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. ஆனால், ரசிகர்கள் பலருமே இந்தக் கூட்டணி இணைந்து 'துப்பாக்கி 2' பண்ணுமா என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தற்போது, துப்பாக்கி 2 திரைப்படம் தளபதி 65 படமாக உருவாகவுள்ள என்ற நம்பதகுந்த வட்டரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கவுள்ளார். இரண்டு பெரிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க போட்டி போட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.