நேற்று (மார்ச் 15) மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தாய், தந்தை உட்பட படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். மாஸ்டர் பட விழாவில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன், விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார்.
நடிகை சிம்ரனின் நடனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது.
Ungalathan vijay theditu irukaru neega inga vanthu tweet potutu irukinga— ʎɐɾıΛ ɥsoɥʇuɐS (@santhosh199107) March 15, 2020
இந்நிலையில், நடிகை சிம்ரன் மேடையில் நடனமாடிய அதே காஸ்ட்யூமுடன் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அங்கே விஜய் உங்களை தேடிட்டு இருக்காரு. நீங்க என்னடானா..? இங்க டிவிட்டர்ல இருக்கீங்க..! என்றும் உங்களுக்கு வயசே ஆகாதா..? என்ன ஒரு டான்ஸ் என்றும் சிலாகித்து வருகிறார்கள்.
Ungalukku vayase agatha mam Enna oru dance— Vijay S (@sethuvijay10bo1) March 15, 2020
