சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூனம் பஜ்வா. ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த படம் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் அவருடன் கைகோர்த்து நடித்தார், இந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் தமிழ் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
இதை தொடர்ந்து துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, முத்தின கத்தரிக்கா, ஆம்பள, ரோமியோ ஜூலியட், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தது போல கொலுக் மொழுக்கென இருந்தாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் ஏனோ சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை. இதனால்,எந்த மாதிரியான கதை வந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி.
ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். நேற்று (ஏப்ரல் 5) இவரது பிறந்தநாள்.
ஆனால், 144 தடை உத்தரவு நாடு முழுதும் அமாலில் இருப்பதால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலை. இதனால், வீட்டில் இருந்தபடியே பிறந்தநாள் கொண்டாடிய அவர் ரசிகர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டத்தை பரிசாக கொடுத்துள்ளார் .