"என் புருஷனை இந்த நிலைக்கு ஆளாக்கிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன்.!" - பிரபல நடிகரின் மனைவி ஆவேசம்..!


இப்படி கூறியது வேறு யாருமல்ல. நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவின் மனைவி தான். கடந்த 1995-ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா ராம்லத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவா-வை திருமணம் செய்து கொண்டா ராம்லத் தன்னை இந்து மதத்திற்கு மாற்றிக்கொண்டு லதா என்று பெயர் மாற்றமும் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

இதற்கு காரணம், நயன்தாராவை காதலித்தது தான். இதனால், பிரபுதேவாவின் இமேஜ் பெரிய அளவில் டேமேஜ் ஆகியது. 2009-ம் ஆண்டு இவர் இயக்கிய வில்லுபடத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா.அப்போது, இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொண்டது. தொடர்ந்து, பட விழாக்கள், பொது இடங்கள் என இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர்.

நயன்தாராபிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு காதலித்தார். ஆனால், இந்த காதல் நெடுநாள் நிலைக்க வில்லை. நயன்தாரா பிரபுதேவா-வை பிரிந்து சென்றுஇயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி லதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் எனக்கு நேர்ந்த இன்னல்களை இன்று வரை மறக்கவில்லை. எந்தக்காலத்திலும் நயன்தாராவை மட்டும் மன்னிக்க மாட்டேன். என்னுடைய கணவர் நயன்தாராவின் வருகைக்கு முன்னர் எங்களுடன் மிகவும் பாசமாக இருந்தார். 

எங்களுக்கு புதிதாக வீடு கூட வாங்கி கொடுத்தார். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். ஆனால், நயன்தாரா தான் எங்கள் குடும்பத்தை உடைத்து சீரழித்து விட்டார். என் கணவர் இந்த நிலைக்கு ஆளாக்கிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் எட்டி உதைப்பேன். நான் காவல்துறையினரிடம் பு கார் அளிக்க உள்ளேன். எந்த பெண்ணின் கணவரையும் வேறு ஒரு பெண் அபகரித்தால், வழங்கப்படும் தண்டனையை நடிகை நயன்தாராவுக்கும் வழங்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--