நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி யாருன்னு தெரியுமா..? - இவ்வளவு பெரிய மகளா..? - வைரலாகும் புகைப்படம்..!


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் போடப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் அனவைரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். 

சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

வீட்டு வேலை செய்வது தொடங்கி, ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவது வரை சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அது அவர்களது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. 

அந்த வகையில், பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் சிறப்பான தருணங்கள். வீட்டிலேயே இருங்கள். பாதுக்காப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1998-ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009-ம் சில பிரச்சனைகள் காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு, 2010-ம் ஆண்டு பொனி வர்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி யாருன்னு தெரியுமா..? - இவ்வளவு பெரிய மகளா..? - வைரலாகும் புகைப்படம்..! நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி யாருன்னு தெரியுமா..?  - இவ்வளவு பெரிய மகளா..? - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.