"வந்தேறி..! கொல்டி..! நீங்க தெலுங்கா..?." - கிண்டல்களுக்கு அதிரடி பதில் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010 ஆம் ஆண்டு நீ தானே அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 

இதனைத்தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அவர்களும் இவர்களும், விளையாட வா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை. 

இதனையடுத்து இவர் 2014 ஆம் ஆண்டு ரம்மி என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். 

இதனைத்தொடர்ந்து அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆனால், சமீபகாலமாக ஒரு பக்க ரசிகர்கள் வெறுப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு காரணம், ஐஸ்வர்யா ராஜேஷ் உகாதி வாழ்த்துக்கள் கூறியது தான். உகாதி வாழ்த்து கூறியதால், நீங்கள் தெலுங்கா..? வந்தேறியா..? என்று கிளம்பி விட்டனர் ஒரு குழுவினர். இப்போது, அந்த குழுவினர் யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆம், தமிழ் நாடு, தமிழன் என்ற பெருமையை, தலைக்கனமாக மாற்றி தலையில் ஏற்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களை வந்தேறி என்று இழிவாக பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒரு சிலர் தான். 

அவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவதே இல்லை. இங்கு எப்படி வெளி மாநிலத்தவர்கள் வந்து பிழைப்பு நடித்துகிறார்களோ..? அதே போல தான், நம்ம தமிழ்நாட்டில் இருந்தும் லட்சக்காணக்கானோர் வெளிமாநிலங்களில் வேலை செய்கின்றார்கள். அப்போது, தமிழர்கள் எல்லாம் அந்த மாநிலங்களின் வந்தேறிகள் என்றால் நாம் ஒப்புக்கொள்வோமா..? இந்தியன் என்ற உணர்வே இன்று சிலர் மத்தியில் இல்லை என்பது கசப்பான உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம், நடிகைஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த ஏப்ரல் 14-ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை ரசிகர்களுக்கு கூறினார். இதனை பார்த்த அந்த ஒரு சிலர், நீங்க தெலுங்கு தானே..? நீ வந்தேறியா..? கொல்டியா நீ..? என்று ஏகத்துக்கும் அவரை திட்ட ஆரம்பித்து விட்டனர்.

இதனை பார்த்தஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ், தெலுங்கு என்பது விஷயமே இந்த நாள் இன்று பெரிய நாளாக அமையட்டும் என கூலாக பதில் சொல்லியுள்ளார்.இதனை பார்த்த சக ரசிகர்கள், ஆம்.. அவர் தெலுங்கு தான்..அதற்கு என்ன இப்போது..? என்று ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிரார்கள்.

இப்படி, மற்ற மாநிலத்து நபர்களை வந்தேறி..! கொல்டி...! என கிண்டலடிக்கும் சிலர், நாம் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது நம்மை பார்த்து வந்தேறி..! மத்ராசி..! என்று கிண்டலடித்தால் நம் மனம் எவ்வளவு நொந்து போகும் என்பதை தயவுசெய்து உணர்ந்து கொள்ள வேண்டும்.


"வந்தேறி..! கொல்டி..! நீங்க தெலுங்கா..?." - கிண்டல்களுக்கு அதிரடி பதில் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! "வந்தேறி..! கொல்டி..! நீங்க தெலுங்கா..?." - கிண்டல்களுக்கு அதிரடி பதில் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! Reviewed by Tamizhakam on April 16, 2020 Rating: 5
Powered by Blogger.