தலைவிக்கு தில்ல பாத்திங்களா..? - மாஸ்டர் மாளவிகா வெளியிட்ட புகைப்படம் - மிரண்டு போன ரசிகர்கள்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

போட்டோகிராஃபி மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் அவ்வபோது தான் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து தான் போனார்கள். சிறுத்தை ஒன்று மானை வேட்டை ஆடி உண்ணும் ஒரு புகைப்படத்தை தில்லாக எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, மாலை நேரம் ஆகிவிட்டது. சூரியன் மறைந்து விட்டது. நாங்கள் கேம்பிற்கு திரும்பிக்கொண்டிருந்தோம். 

அப்போது, எங்களுடைய உதவியாளர் ஜீப்பை நிறுத்தி எங்களுக்கு காட்டிய காட்சி இது. எந்த வெளிச்சமும் இல்லை. இருந்தாலும், இதனை படம் பிடிக்க முயற்சி செய்தேன். புகைப்படம் க்ரெய்னியாக வந்தாலும் சரி என புகைப்படத்தை எடுத்தேன். என்னுடைய நண்பர் இதனை எடிட் செய்து அழகாக கொடுத்து விட்டார் என்று கூறியுள்ளார்.


தில்லு தாங்க உங்களுக்கு..!


Previous Post Next Post
--Advertisement--