"விஜய்யுடன் நடிப்பீங்களா..?" - யாரும் எதிர்பார்க்காத பதிலை பட்டென கூறிய சைக்கோ பட நடிகை..!


நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருடன் நடிக்க வேண்டும் என பல ஹீரோயின்கள் விருப்பம் தெரிவிப்பது வாடிக்கை. 

இந்நிலையில், காற்று வெளியிடை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி சமீபத்தில் வெளியான சைக்கோ படம் வரை வித்தியாசமான கதை களத்தில் நடித்து பிரபலமான நடிகை அதிதி ராவ் ஹைதாரி விஜய்யுடன் நடிப்பீர்களா..? என்ற கேள்விக்கு யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்துள்ளார். 

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘ப்ரஜாபதி’ படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் அதிதி ராவ் ஹைதாரி . இவர் ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் ‘செக்கச்சிவந்த வானம்’ மூலம் மணிரத்னம் படத்தில் இணைந்தார். 

இரண்டாவது முறையாக இவரை மணிரத்னம் தன் படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அவர் இப்போது மூன்றாவது முறையாக மணிரத்தினம் இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதனால், அதிதி மேல் சினிமாதுறையினரின் பார்வை பலமாக விழுந்துள்ளது.கொரொனோ தோற்றால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், நடிகைகள் ரசிகர்களுடன் நேரலையில் பேசுவது. பதிவுகள் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பது போன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள். 


அந்த வகையில், அதிதியும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். ரசிகர் ஒருவர் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா..? என்று கேட்டதற்கு " நீங்க அவரு கிட்ட தான் கேக்கணும்..!" என்று யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்துள்ளார்.

"விஜய்யுடன் நடிப்பீங்களா..?" - யாரும் எதிர்பார்க்காத பதிலை பட்டென கூறிய சைக்கோ பட நடிகை..! "விஜய்யுடன் நடிப்பீங்களா..?" - யாரும் எதிர்பார்க்காத பதிலை பட்டென கூறிய சைக்கோ பட நடிகை..! Reviewed by Tamizhakam on April 08, 2020 Rating: 5
Powered by Blogger.