பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா கடந்த 2018-ம் ஆண்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரானார்.
அந்நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற ரித்விகா, பின்னர் டார்ச் லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வரும் ரித்விகா அவ்வப்போது ரசிகர்களிடம் சண்டை வளர்த்து வருகிறார்கள். சமீபத்தில் கூட, இவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்திற்கு "பாவம், பட வாய்ப்பு இல்லாம இருக்காங்க.." என்று ஒரு ரசிகர் கருத்து கூட நடுவிரலை காட்டி மூடிட்டு போடா என்று காட்டமாக பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ரித்விகாவிடம் ஹாட் ஆண்ட்டி நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் எனக்கு ஒரு ஹாட் சொல்லுங்க என்று கேட்டுள்ளார் ஒரு ரசிகர். இதனை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்ற ரித்விகா கூலாக ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
ஆண்ட்டி என்று கூறி ஹாய் கூற சொன்ன ரசிகருக்கு ஹாட் அங்கிள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனை பார்த்த சக ரசிகர்கள் என்ன இவங்க ரசிகர்களுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்க..? இந்த மாதிரி ஆட்களையெல்லாம் பாஸ் செய்து விட்டு போக வேண்டியது தானே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Tags
Rythvika