"ஓ.. வாவ்.. மெடிக்கல் ஷாப்பில் இதை விற்பார்களா..? தெரியாம போயிடுச்சே.." - வைரலான வீடியோ..! ராகுல் பரீத் சிங் பதிலடி..!


இளம் நடிகை ராகுல் ப்ரீத் சிங் மது பாட்டில்களை வாங்கி செல்கிறார் என்ற பெயரில் வெளியான் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு நடிகையான ராகுல் பரீத் சிங் நடிகர் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனார். 

அதனை தொடர்ந்து, சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்தார். என்.ஜி.கே திரைப்படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் பப்படம் ஆகியது. ஊரடங்கு காரணமாக, நாட முடங்கி கிடக்கும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளனர். 

அந்த வகையில், இன்று காலை கடைவீதியில் சில பாட்டில்களை கையில் வைத்து கொண்டு நடந்து செல்வது போன்ற ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியது. இந்த, வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் வைரலானதை அடுத்து அவர் மதுவை வாங்கி செல்கிறாரா? என பலரும் சந்தேகத்தை எழுப்பினர். 

இதற்கு பதிலளித்துள்ள ராகுல் பரீத் சிங்.. ஓ.. வாவ்.. மெடிக்கல் ஷாப்பில் மது விற்பார்கள் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டதே..! என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

"ஓ.. வாவ்.. மெடிக்கல் ஷாப்பில் இதை விற்பார்களா..? தெரியாம போயிடுச்சே.." - வைரலான வீடியோ..! ராகுல் பரீத் சிங் பதிலடி..! "ஓ.. வாவ்.. மெடிக்கல் ஷாப்பில் இதை விற்பார்களா..? தெரியாம போயிடுச்சே.." - வைரலான வீடியோ..! ராகுல் பரீத் சிங் பதிலடி..! Reviewed by Tamizhakam on May 09, 2020 Rating: 5
Powered by Blogger.