தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, உதயநிதியின் படத்தை உதறி தள்ளிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில், கடைசியாக 'கோமாளி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இந்தியன் 2 உட்பட மூன்று படங்களும், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும், இவரின் கை வசம் உள்ளன.
அதே போல் இவர் நடித்து முடித்துள்ள, 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் உள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகளில் ஏகத்துக்கும் கவர்ச்சி இருப்பதால் அந்த காட்சியை வெட்ட வேண்டும் என தணிக்கை குழு கூறுகின்றது.
ஆனால், அந்த காட்சிகளை எல்லாம் வெட்டினால் படம் , படமாக இருக்காது என இயக்குனரும், தயாரிப்பாளரும் முட்டி மோதி வருகிறார்கள். இந்நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " கடந்த மூன்று நாட்களாக என் கைகள் பார்த்த அளவு ஆல்கஹாலை அஎன்னுடைய லிவர் இந்த வாழ்நாளில் பார்த்தது கிடையாது" என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அப்படியென்றால் உங்களுக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது என்பதை ஓப்பனாக ஒப்புக்கொள்கிரீர்களா..? என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.