ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? - அதிரடி தகவல்கள்..!


நடிகர் விஜய்யின் மகன் எப்போது சினிமாவில் அறிமுகமாவர் என்று நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், விஜயின் மகனுடைய சினிமா பிரவேஷம் குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருகின்றன.

ஆனால், நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யின் மகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழின் முன்னணி நாயகனான விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இவரது குணத்துக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் நடிப்பில் வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாகவும், விஜய்யின் மகன் அதில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் இதுகுறித்து விஜய்சேதுபதி பேச அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்த படத்தில் நடிக்க விஜய்யின் மகனுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால், படம் முடிந்து வெளியானவுடன் சம்பளம் பற்றி பேசிக்கொள்ளலாம் என விஜய் தரப்பில் கூறியதாக தெரிகிறது.

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு நடிகர் விஜய்யின் மகன் சினிமா என்ட்ரியாவது பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என தெரிகின்றது.

ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? - அதிரடி தகவல்கள்..! ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? - அதிரடி தகவல்கள்..! Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.