தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக மறு ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வீட்டில் இருந்த படியே மாஸ்டர் படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடிந்துள்ளது படக்குழு.
லாக்டவுன் முடிந்தாலும் திரையரங்குகளுக்கு எதிர்பார்த்த கூட்டம் வருமா.? என்பது சந்தேகமாக இருக்கும் இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஒரே அடியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷ்க்கும் தளபதி விஜய்க்கும் கருத்து வேறுபாட்டால் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், இது குறித்து நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் மேனேஜர் ஜெகதீசிடம் விசாரித்தபோது இதனை முற்றிலுமாக மறுத்துள்ளாராம். இதன் மூலம் இந்த தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

