அதிமுக-வில் தனுஷ், சிம்புவுக்கு ஜோடி போட்ட பிரபல இளம் நடிகை..?


தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் மேகா ஆகாஷ் 2017ஆம் ஆண்டு “லை” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் ஒரு பக்கா கதை, எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடித்து பிரபலமாகும் முன்பே சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானார் மேகா ஆகாஷ். ஆனால், இவர் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் சரியாக வரவேற்பை பெறாததால் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.

தற்போது, தமிழில் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள். மற்ற நடிகைகளை போல, அம்மணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது கிடையாது.

ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் தான் எட்டிப்பார்பார். இதுவே இவரது பெரிய மைனஸ் பாய்ன்ட் என்று கூறலாம். சமீப காலமாக நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க சமூக வலைதளங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால், இளம் நடிகையான மேகா ஆகாஷ் இதனை செய்வதில்லை. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதுகாப்பு குறித்த விஷயங்களை டஅதிகம் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் கொரோனா குறித்த பதிவுகளை, மறுபதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷின் நடவடிக்கையை பார்த்து, 'அ.தி.மு.க.,வில் சேரப் போகிறாரோ...' என, ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அதிமுக-வில் தனுஷ், சிம்புவுக்கு ஜோடி போட்ட பிரபல இளம் நடிகை..? அதிமுக-வில் தனுஷ், சிம்புவுக்கு ஜோடி போட்ட பிரபல இளம் நடிகை..?  Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.