பிரபல தமிழ் சீரியல் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை - அழுகிய நிலையில் கண்டெடுக்கபட்ட பிணங்கள் - திடுக் தகவல்கள்..!
கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுக்கு பின் இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சினிமா, சின்னத்திரை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் பலரும் வேலையை இழந்து வாழ்க்கை முறை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு நீண்ட நாட்களுக்கு பின் அனுமதி அளித்துள்ளது. இருந்த போதிலும் வறுமைக்குள்ளானோர் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
தற்போது சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரின் சகோதரி ஜெய கல்யாணி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர்களது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்க சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலிசில் புகார் அளித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் இருந்த சடலங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட, விசாரணையில் அவர்கள் இருவரும் பண நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டள்ளது தெரியவந்துள்ளது.
பிரபல தமிழ் சீரியல் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை - அழுகிய நிலையில் கண்டெடுக்கபட்ட பிணங்கள் - திடுக் தகவல்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 08, 2020
Rating:
