ஜாதி பெயரை சொல்லி வர்ணித்த விஷமிக்கு நடிகை ரித்விகா சிங் செருப்படி பதில்..!
2013-ம் ஆண்டு பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரித்விகா அறிமுகமானார். தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பரிச்சயமானார்.
மேலும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வானார். ரித்விகா நடிப்பில் கடைசியாக வால்டர் படம் வெளியானது. என்னதான் சினிமாவில் ஜாதி மதம் பேதம் இல்லை என ஒருபக்கம் படம் எடுத்தாலும் ஜாதியை மையப்படுத்தியும் சில திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்னமும் ஜாதி வெறியை கொண்டு படமெடுத்து கொண்டிருக்கும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரித்விகா.மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கபாலி போன்ற பல பெரிய படங்களிலும் நடித்து வருகிறார்.ரித்விகா சமூகவலைதளத்தில் அவரது ஜாதியை கொண்டு ரசிகர்களுடன் சண்டை போட்டுக் கொள்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ரசிகர்களும் அவரின் சாதியை இழிவாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ரித்விகா ஜாதியை குறிப்பிட்டு அந்த ரசிகர், பருவத்திலே எஸ்சி பொண்ணுங்க கூட அழகாகத் தான் தெரியுது என குறிப்பிட்டிருந்தார்.அதற்கு உடனடியாக ரித்திகா, தலித் சமூகத்தினரை குறிப்பிட்டது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகருடன் பதிலுக்கு பதில் போட்டி போட்டால் நன்றாகவா இருக்கிறது எனவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ரித்விகா தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க.
ஒருவகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி.
ஜாதி பெயரை சொல்லி வர்ணித்த விஷமிக்கு நடிகை ரித்விகா சிங் செருப்படி பதில்..!
Reviewed by Tamizhakam
on
July 21, 2020
Rating:
