மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் 'துப்பறிவாளன்'. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.
இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.
தற்போது கதாநாயகிகளுக்கு இடையே பல்வேறு சேலஞ்சுகள் பிரபலமாகிவரும் நிலையில்
தற்பொழுது ப்ளாக் அண்ட் வைட் புகைப்படத்தை வெளியிடும் சேலஞ்ச் ஒன்று
பிரபலமாகி வருகிறது.
பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான
நடிகையாக வலம் வரும் ரேபா ஜான் மஞ்சிமா மோகன் கொடுத்த சவாலை ஏற்று பிளாக்
அண்ட் வொயிட் புகைப்படத்தை பதிவேற்றியதை தொடர்ந்து தற்பொழுது அனு
இமானுவேலுக்கு அந்த சவாலை கொடுத்துள்ளார்.
தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை அனு இம்மானுவேல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியுள்ளார்.




