த்ரிஷா இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சூப்ப்ப்பர்ர்ர்ர் மாடல் மீராமிதுன் காட்டம்..!


சர்ச்சை நாயகி "சூப்பர் மாடல்" ஆம் சூப்பர் மாடல் என்று தான் இவரை அழைக்க வேண்டுமாம். வட நாட்டு ஆங்கில பத்திரிக்கைகள் எல்லாம் என்னை சூப்பர் மாடல் என்று முன் நிறுத்துகின்றன. ஆனால், தமிழ் ஊடகங்கள் இப்படி செய்வதில்லை என்று குற்றம் சாட்டுகிறார் நடிகை மீரா மிதுன்.

இல்லாத ஆட்டம் போட்டு வந்த இவர் சமீபத்தில் சில காலம் அடக்கி வாசித்து வந்தார். திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டதால் அவர் மனம் திருந்தி அமைதியாகிவிட்டார் என நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பான அவரது பதிவுகள், அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தின. ஆனால், நானா..? மாறுவேன..? நெவர்... என மீண்டும் சர்ச்சையை கிளப்ப ஆரம்பித்துவிட்டார் மீரா.

சேரன், முகென், விஜய் உள்ளிட்டோரை வம்பிழுத்த அவரது குறி தற்போது த்ரிஷா பக்கம் திரும்பி இருக்கிறது. த்ரிஷா தன்னை காப்பியடிப்பதாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் மீரா மிதுன்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "த்ரிஷா உங்களுக்கு இது தான் கடைசி எச்சரிக்கை. இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என உங்கள் மனசாட்சிக்கு தெரியும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

** திரிஷா மேடம்... கேட்டுகிட்டீங்களா..?

த்ரிஷா இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சூப்ப்ப்பர்ர்ர்ர் மாடல் மீராமிதுன் காட்டம்..! த்ரிஷா இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சூப்ப்ப்பர்ர்ர்ர் மாடல் மீராமிதுன் காட்டம்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.