தனி அறையில் நடிகையுடன் பிரபல நடிகர் களியாட்டம் - கையும் களவுமாக பிடித்த மனைவி நடிகை..!


சினிமா கூட பரவாயில்ல போல இருக்கு ஆனால், சமீப காலமாக சீரியலில் நடக்கும்அட்டூழியங்கள் எல்லை மீறிசெல்கின்றன.முன்பெல்லாம் சினிமா நடிகர், நடிகைகள் தான் அடிக்கடி விவாகரத்து, கள்ள தொடர்பு போன்ற விவாகரங்களில் சிக்கி வந்தனர். 

ஆனால், நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று கேட்கும் படி சீரியல் நடிகர், நடிகைகளும் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருவது சந்தி சிரிக்கிறது. பொதுவாக சீரியல் நடிகைகள் முக்கால் வாசி பேர் திருமணம் ஆனவர்களாக தான் இருப்பார்கள். 

அப்படிதான் அந்த சாமி பெயர் கொண்ட இளம் நடிகரும் திருமணமானவர். இவர் தன்னுடன் சீரியலில் நடித்த ஜெயமான நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னதிரையுலகம் வாழ்த்தியது. இதனை தொடர்ந்து அழகிய குழந்தை ஒன்றும் பிறந்தது. 

திருமணம் என்றால், மனதிற்கு பிடித்தவள் கழுத்தில் மூணு முடிச்சு போடுவதோடு வாழ்க்கை முடிவதில்லை. அங்கு தான் வாழ்க்கை ஆரம்பிகிறது என்று காதலித்து திருமணம் செய்யும் ஒரு சிலருக்கு தெரிவதில்லை. 


இது இந்த சாமி பெயர் கொண்ட நடிகருக்கும் தெரியவில்லை. பழக பழக பாலும் புளிக்கும் என்பது போல குழந்தை பிறந்த பிறகு காதல் மனைவி மீது இருந்த பாசமும், மோகமும் குறைந்து லட்சுமிகரமான ஒரு சீரியல் நடிகையை தேடி சென்றார். 

அந்த லட்சுமி கரமான நடிகை ஒன்றும் லேசு பட்ட ஆள் கிடையாது. வெளிச்சமான இசை சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றிவர் அங்கு வேலை செய்யும் சில ஆண்கள் அவருகளுடைய ஆசைக்கு இணங்க சொல்லி என்னை தொந்தரவு செய்கிறார்கள் என்று அதிர்ச்சி புகார் ஒன்றை சொல்லி அந்த தொலைகாட்சியை விட்டு வெளியேறினார். 


புகார் கொடுத்தது பெரிய இடம் இல்லையா..? அதனால் இந்த செய்தி குட்டி செய்தி, பெட்டி செய்தி என்ற எல்லைக்குள் அடக்கம் செய்யப்பட்டது. நடிகையும் இதற்கு மேல் விவகாரம் செய்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று உணர்ந்து வேறு சேனலுக்கு சென்று அங்கு பணிபுரிந்த ஒருவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டார். 

இதன் பிறகு, இருவரும் சீரியல், ரியாலிட்டி ஷோ, கடை திறப்பு விழா, ரியல் எஸ்டேட் விளம்பரம் என பண மழையில் நனைந்தார்கள். நம்ம ஊரில், காசு பணம் வந்தால் கஞ்சியும் கசக்கும் என்பார்கள். அது போல காசு பணம் கையில் வந்ததும் அம்மணி சுதந்திர பறவையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.விளைவாக கணவரிடம் இருந்துவிவாகரத்து பெற்றார். 

பால் புளித்தது , கஞ்சி கசந்தது


இப்படி பால் புளித்த சாமி நடிகரும், கஞ்சி கசந்த லட்சமி நடிகையும் இப்போ ஒரே சீரியலில் இணைந்து நடித்தார்கள். பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் வைத்தது போல காதல் நெருப்பு இருவருக்குள்ளும் பற்றி எரிந்தது. இந்த விவகாரம் மீடியா, தொலைக்காட்சி என நாரி நசநசத்தது. 

ஜெயமான நடிகை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெரும் முடிவில் இருக்கிறார். ஆனால்,ஆதாரம் இல்லாமல் மனைவி விவாகரத்து கேட்டால் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது கடினம் என்பதால் அமைதி காத்து வந்தார். 

இந்நிலையில், ஜெயமான நடிகைக்கு ஹெவியான ஆதாரம் ஒன்று தேவைப்பட்டது. ஜெயமான நடிகையின் மீது தான் நியாயம் உள்ளது என அவரது நண்பர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக இருந்தார்கள். 

இப்படி நிலைமை இருக்க, சாமி பெயர் கொண்ட அந்த சீரியல் நடிகரும், லட்சுமிகரமான சீரியல் நடிகையும் லாக்டவுன் நேரத்திலும் அடிக்கடி சந்தித்து தனிமையை கொண்டாடி வந்துள்ளனர். 


இதனை நோட்டம் விட்ட ஜெயமான நடிகையின் நண்பர்கள், சாமி நடிகரும், லட்சுமி நடிகையும் ஒரே அறையில் இருக்கும் சில காட்சிகளை லாவகமாக வீடியோ எடுத்து நடிகையிடம் கொடுத்து விட்டார்களாம். 

இந்த ஆதாரம் போதுமே உன்னிடம் இருந்து நீதி பெறுவதற்கு எனவும், சட்டம் சொல்வதை கேட்டு எனக்கும், என் குழந்தைக்கும் கொடுக்க வேண்டிய இழப்பீட்டை கொடுத்து விட்டு நடையை கட்டு இல்லையென்றால் இந்த வீடியோ ஆதாரம் கோர்ட்டில் கொடுத்து விடுவேன் என்று அன்பாக கூறியுள்ளாராம் நடிகை.

தனி அறையில் நடிகையுடன் பிரபல நடிகர் களியாட்டம் - கையும் களவுமாக பிடித்த மனைவி நடிகை..! தனி அறையில் நடிகையுடன் பிரபல நடிகர் களியாட்டம் - கையும் களவுமாக பிடித்த மனைவி நடிகை..! Reviewed by Tamizhakam on August 20, 2020 Rating: 5
Powered by Blogger.