தலைப்யை தர முடியாது - விஜய்யிடம் கறார் காட்டிய கலைப்புலி.எஸ்.தாணு..! - என்ன பிரச்சனை..?


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகும் திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். அதே போல் பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி வெற்றி தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் கலைப்புலி எஸ். தாணு. 

இவர் தளபதி விஜய்யை வைத்து தயாரித்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியிட்ட படம் துப்பாக்கி. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரு. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த படம். 

இப்படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான "தெறி" படத்தை எஸ். தாணு தயாரித்தார். இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் 4-ஆம் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படம் துப்பாக்கி 2 வாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலைப்புலி எஸ். தாணு துப்பாக்கி படத்தின் தலைப்பை விஜய்க்கு தரமறுத்து விட்டாராம். 

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், தளபதி65யில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்தார். ஆனால், அதற்கிடையில் சூர்யாவின் "வாடிவாசல்" படத்தை இயக்கி முடித்த பிறகு வெற்றிமாறன் உங்கள் படத்தை இயக்குவார் என விஜய்யிடம் தாணு கூறிவிட்டாராம். 

எனவே, விஜய் முருகதாஸ் படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். இதனால், விஜய்க்கும், தானுவிற்கும் இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது என்றும், அந்த விரிசல் காரணமாக தான் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாணு, விஜய்க்கு தரமறுத்து விட்டார் என்றும் தகவல்கள் தற்போது கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

தலைப்யை தர முடியாது - விஜய்யிடம் கறார் காட்டிய கலைப்புலி.எஸ்.தாணு..! - என்ன பிரச்சனை..? தலைப்யை தர முடியாது - விஜய்யிடம் கறார் காட்டிய கலைப்புலி.எஸ்.தாணு..! - என்ன பிரச்சனை..? Reviewed by Tamizhakam on August 22, 2020 Rating: 5
Powered by Blogger.