"இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்.." - விளாசிய நயன்தாரா - என்ன படம் தெரியுமா..?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ஐய்யா, சந்திரமுகி உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து பிரபலமானார்.
முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி தனது சம்பளத்தினை கோடிக்கணக்கில் வாங்கி வருகிறார்.கடந்து 14 ஆண்டுகளாக தென்னிந்திய ரசிகர்களை தன் அழகு, கவர்ச்சி மற்றும் நடிப்பின் மூலம் கட்டி வைத்திருக்கிறார் நயன்தாரா.
அழகாக இருக்கும் நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள்.நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் கொடி கட்டி பறக்கிறார்.
முன்னணி நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் நிலையில், நீங்க வந்த மட்டும் போதும் என நயன்தாராவின் போட்டோஸைக் காண ரசிகர்கள் தவம் கிடந்தனர்.
சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த நயன்தாரா, தற்போது சமூல வலைத்தளங்களில் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு டூர் போனாலும் சரி, கோவில், கோவிலாக ஆன்மீக பயணம் போனாலும் சரி சுட, சுட செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றிவிடுகிறார்.
தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார்.இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆம்,கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாகவும், அந்த படத்தின் ஸ்க்ரிப்டை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.
"இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்.." - விளாசிய நயன்தாரா - என்ன படம் தெரியுமா..?
Reviewed by Tamizhakam
on
October 10, 2020
Rating:
