இப்படியொரு கேரக்டரில் சாய் பல்லவியா? - அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...!


சாய் பல்லவி தெலுங்கில் நடிக்க உள்ள சூப்பர் ஹிட் தமிழ் படத்தின் ரீமேக் கேரக்டர் குறித்து ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து தமிழில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. 
 
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். அதற்காக தமிழ்ப் படத்தை தெலுங்கிற்கு ஏற்றபடி கதை, திரைக்கதையை மாற்றி வருகிறார்கள். ஸ்கிரிப்ட் வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். 
 
அதைப் படித்துப் பார்த்த சிரஞ்சீவியும் ஓகே சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். அடுத்து சிரஞ்சீவி தவிர மற்ற கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வுக்கும் ஆலோசனை நடக்கிறதாம். படத்தில் நாயகி கதாபாத்திரத்தை விட தங்கை கதாபாத்திரத்திற்குத்தான் முக்கியத்துவம் அதிகம். 
 
எனவே, நடிப்பில் நன்றாகப் பெயரெடுத்துள்ள, குடும்பத்து ரசிகர்களையும் தெலுங்கில் கவர்ந்துள்ள நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என தமிழ் நடிகையான சாய் பல்லவி பெயரை பரிந்துரை செய்துள்ளார்களாம். அவருக்கு தெலுங்கில் நல்ல ஒரு இமேஜ் உண்டு. 
 
தங்கை கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவும் இருப்பார் என படக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்கள். சாய் பல்லவியிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 
 
ஆனால், தங்கை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க சம்மதிப்பாரா என்பதுதுன் இப்போதைய கேள்வியாக உள்ளது. 
 
என்னது சாய் பல்லவிக்கு தங்கச்சி கேரக்டரா? வேண்டாம் அதை எல்லாம் ஒத்துக்காதீங்க, அதை பார்க்குற சக்தி எங்களுக்கு இல்லை என சாய் பல்லவிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இப்படியொரு கேரக்டரில் சாய் பல்லவியா? - அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...! இப்படியொரு கேரக்டரில் சாய் பல்லவியா? - அதிர்ச்சியுடன் காத்திருக்கும் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on October 17, 2020 Rating: 5
Powered by Blogger.