விஜயுடன் நடித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை - புலம்பும் மாளவிகா..! - என்ன ஆனது..?


முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி படுதோல்வியடைந்த சர்கார் படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் அட்லி இயக்கத்தில் "பிகில்" படத்தில் நடித்திருந்தார். 
 
கடந்த வருடம் தீபாவளி அன்று வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்" என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். 
 
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் உறவினர் பிரிட்டோ சேவியர் இந்த படத்தை தயாரித்துள்ளார். 
 
இந்தப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் படம் வெளியாவது கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 
 
எங்கள் OTT தளத்தில் ரிலீஸ் பண்ணுங்க என்று முன்னணி OTT தளங்களான அமேசான் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அணுகிய போதும் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என NO சொல்லி விட்டது படக்குழு. 
 
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று சினிமா வட்டாரம் கணித்தது. 
 
ஆனால், ஹீரோயினாக நடித்த முதல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்த தொடங்கிவிட்டனர் கோடம்பாக்கத்தினர். 
 
ஏற்கனவே, இளம் நடிகைகள் மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் ஆகியோருக்கு நேர்ந்த அவலம் இப்போது மாளவிகா மோகனனுக்கும் ஏற்பட்டுள்ளது. மஞ்சிமா மோகன் அறிமுகமான அச்சம் என்பது மடமையடா மற்றும் மேகா ஆகாஷ் அறிமுகமான எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தான் ரிலீஸ் ஆகின. 
 
இதனாலேயே, நல்ல எதிர்காலம் உண்டு என்று கணிக்கப்பட்ட இந்த நடிகைகளின் சினிமா வாழக்கை கிட்டதட்ட அஸ்தமனம் ஆகிவிட்டது. இப்போது, மாளவிகா மோகனனும் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார். 
 
நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்புகள் அமையவில்லை. கொரோனா லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகள் ஆரம்பாமாகி விட்ட நிலையிலும் அம்மணிக்கு புதிய படங்களின் வாய்புகள் எதுவும் கிடைக்கவில்லையாம். 
 
எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கவர்ச்சி ஆற்றை திறந்து விட்டுள்ளார் அம்மணி. இருப்பினும் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் கிடைக்காமல் புலம்பிக்கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.

விஜயுடன் நடித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை - புலம்பும் மாளவிகா..! - என்ன ஆனது..? விஜயுடன் நடித்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை - புலம்பும் மாளவிகா..! - என்ன ஆனது..? Reviewed by Tamizhakam on November 27, 2020 Rating: 5
Powered by Blogger.