"தளபதி 65" - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! - இதை கவனிச்சீங்களா..!


தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "மாஸ்டர்" திரைப்படம், விரைவில் திரையில் வெளியாகும் என நம்பபடுகிறது. 
 
இதனால் அதிகபடியான ரசிகர்கள் திரைக்கு வருவது மட்டுமின்றி தொடர்ந்து சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் அடுத்ததாக தளபதி 65 படத்தை இயக்கவிருந்த முருகதாஸ் விலகிவிட்ட நிலையில், இந்த படத்தை யார் இயக்கப்போவது என்ற ரேஸில் இயக்குனர் நெல்சன் முன்னிலை வகுத்து வந்தார். 
 
இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், அவசர அவசரமாக இன்று "தளபதி 65" படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
 
இந்த படத்தை நெல்சன் இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இவர், சிவாகார்த்திகேயனை வைத்து தற்போது "டாக்டர்" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
 
இந்நிலையில், தற்போது தளபதி 65 படத்தின் அறிவிப்பு இணையத்தில் பரவி வருகின்றது. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளார்.
 


இந்த அறிவிப்பு வீடியோவை கவனித்தால், இதில் துப்பாகிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியும். எனவே இந்த படம் துப்பாக்கி 2-வாக இருக்க வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

"தளபதி 65" - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! - இதை கவனிச்சீங்களா..! "தளபதி 65" - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! - இதை கவனிச்சீங்களா..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.