திருவான்மியூர் சொகுசு பங்களா - Audi கார் எப்படி வந்தது..? - சித்ராவின் தோழி கூறிய பகீர் தகவல்..!
சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 14-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை செய்து வருகிறார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், ஹேம்நாத் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முக்கியமாக சித்ராவுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததா? என்று விசாரிக்கப்பட்டது. மேலும் சித்ரா தங்கியிருந்த விடுதியின் ஊழியர்கள், சித்ராவுடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என இதுவரை 16 பேரிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி உள்ளார்.
சொகுசு பங்களா - Audi கார்
இது ஒருபுறம் இருக்க, சித்ராவின் தோழி கங்கா பாணி என்பவர், சித்ரா தற்போது திருவான்மியூரில் கட்டி வந்த சொகுசு பங்களா மற்றும் அவர் சமீபத்தில் வாங்கிய Audi கார் போன்றவை சித்ரா மீது கண் வைத்திருந்த விஐபி மகன் ஒருவரின் செல்வாக்கால் தான் சித்ரா வாங்கியதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
மூன்று காதல்
இதுகுறித்து ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் சித்ரா மூன்று பேரை காதலித்துள்ளதாகவும், அதில் ஒரு சில காதல் திருமணம் வரை சென்று நின்றதையும், அவரது ஆடி கார் மற்றும் சொகுசு பங்களா சில விஐபி மகன்களுடன் சித்ராவிற்கு ஏற்பட்ட பழக்கத்தால், அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியது என்றும் இதற்கான இஎம்ஐ போன்றவை மட்டுமே செலுத்தி வந்ததாக தெரிவித்தார்.
ஆனால் இந்த தகவலை சித்ராவின் தாயார் விஜயா அடியோடு மறுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவான்மியூர் சொகுசு பங்களா - Audi கார் எப்படி வந்தது..? - சித்ராவின் தோழி கூறிய பகீர் தகவல்..!
Reviewed by Tamizhakam
on
December 25, 2020
Rating:
