கவர்ச்சி உடையில் வௌவால் போல தலை கீழாக தொங்கும் அமலாபால் - தீயாய் பரவும் போட்டோஸ்..!


கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும் ஒருசிலர் கவர்ச்சியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தத்துவ மழையையும் பொழிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ’வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும். 
 
பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் புதிதாக புத்தகம் படிக்க வில்லை என்றோ அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ளவில்லை என்றோ கவலை பட வேண்டாம். 
 
இது கற்று கொள்வதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்குமான நேரம் இல்லை. ரிலாக்ஸ் செய்யுங்கள். ஒருவர் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பின்னாலேயே ஓட வேண்டாம்’ என்று ஒரு தத்துவ மழையை பொழிந்திருந்தார்.
 
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடனான திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததையடுத்து சினிமா பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
 
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக அமலா பாலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது அது திருப்திகரமாக இல்லாததால் அமலா பாலை சரித்திர படத்திலிருந்து மணிரத்னம் தூக்கியெறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
இந்நிலையில், கவர்ச்சி உடையில் வௌவால் போல தலை கீழாக தொங்கிய படி ஆசனம் ஒன்றை செய்துள்ள அவர் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



மேலும், தன்னுடையதொடையழகு பளீச்சிடும் படி லோ ஆங்கிளில் ஒரு புகைப்படமும் வெளியிட்டு ரசிகர்களின் புருவத்தை உயர்த்த செய்துள்ளார்.