ஐயோ..! - சித்ராவின் உடலை பார்த்து கதறும் பெற்றோர் - நெஞ்சை ரணமாக்கும் புகைப்படங்கள்..!


2018-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்குத் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. 
 
சமூக வலைதளத்தில் சித்ரா ஆர்மி, முல்லை ஆர்மி என்று பல ரசிகர் பக்கங்கள் இருக்கின்றன. இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். 
 
இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 
 
இருவரும் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.சித்ராவின் கணவர் ஹேமநாத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
 
மேலும், நேற்று படப்பிடிப்பில் சித்ராவுடன் நடித்தவர்களுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, சித்ராவின் தந்தையும் நசரத்பேட்டை காவல்துறையினரிடம் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார். 
 
 
இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், ஹேமநாத் - சித்ரா இருவருமே பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதனால் ஆர்.டி.ஓ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
 
 
பிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில்சித்ராவின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று (10.12.2020) மாலை திருவான்மியூரில் உள்ள மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவரது இறுதி சடங்கில் எடுக்கப்பட்ட சில கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள் இங்கே.

ஐயோ..! - சித்ராவின் உடலை பார்த்து கதறும் பெற்றோர் - நெஞ்சை ரணமாக்கும் புகைப்படங்கள்..! ஐயோ..! - சித்ராவின் உடலை பார்த்து கதறும் பெற்றோர் - நெஞ்சை ரணமாக்கும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.