சிக்கி இருப்பாராம்.. - நொடியில் எஸ்கேப் ஆன நடிகை - பீதியில் பேதியே ஆகிட்டாராம்..!


சமீப காலமாக நடிகர் நடிகைகள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கும் போதை வஸ்துக்களுக்கு ஆப்பு வைக்கும் வண்ணம் பல அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து, சில நடிகர்,நடிகைகள் சிக்கி சீக்கியடித்துக்கொண்டிருகிறார்கள். 
 
சமீபத்தில், அந்த ராணி நடிகை மட்டும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். இன்னொரு நடிகையால் எவ்வளவு முயன்றும் ஜாமீன் பெற முடியவில்லை. எனக்கு கொரோனா அறிகுறி இருக்கு என்று கூட ஆக்டிங்கை போட்டு பார்த்து விட்டார். 
 
ஆனால், காவல் துறையோ கொரோனா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம் வாங்க என அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டிற்கு சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். பயந்து போன நடிகை எனக்கு சரியா போயிடுச்சு என்று மீண்டும் சிறைக்கே திரும்பிய கூத்துக்கள் எல்லாம் அரங்கேறியது. 
 
இந்நிலையில், அந்த நடிகையிடமிருந்து கிடைத்த நம்ப தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் பக்கத்துக்கு மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றிற்கு ரெய்டு சென்றனர் போலீசார். 
 
ஆனால், இந்த விஷயம் சில நிமிடங்களுக்கு முன்பு தெரிந்ததால் நொடியில் தப்பியுள்ளார் அந்த இரண்டு பெயர் கொண்ட மலைப்பிரதேச நடிகை. பாடகி, நடிகை என ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயருடன் கௌரமாக இருந்து வரும் இவர் சிக்கியிருந்தால் பேரே கேட்டு போயிருக்கும் என அழுது புலம்பி வருகிறாராம்.
 
இந்த விஷயம் தெரியாத நடிகர் நடிகைகள் அந்த ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சிக்கிக்கொண்டிருகிறார்கள்.  எப்படியோ தப்பித்து விட்டோம், இனிமேல் சிக்கிய நடிகர், நடிகைகளால் ஏதாவது பிரச்சனை வந்திடுமோ என பீதியில் பேதியாகி கிடக்கிறாராம் அம்மணி.
 
ரம்யமான நடிகை என்று நம்பீனால் இப்படி போதை பார்ட்டியா இருந்திருக்காங்களே மை சன் என்று முனுமுனுக்கிறார்கள் சேட்டன்கள்.

சிக்கி இருப்பாராம்.. - நொடியில் எஸ்கேப் ஆன நடிகை - பீதியில் பேதியே ஆகிட்டாராம்..! சிக்கி இருப்பாராம்.. - நொடியில் எஸ்கேப் ஆன நடிகை - பீதியில் பேதியே ஆகிட்டாராம்..! Reviewed by Tamizhakam on December 27, 2020 Rating: 5
Powered by Blogger.