"நேத்து ஒன்னு சொன்னாங்க.. இன்னிக்கு ஒன்னு சொல்றாங்க.." - எது உண்மை..! - நடந்தது என்ன..?


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் 29 வயதான சித்ரா, திருவான்மியூரைச் சேர்ந்த இவர், மெல்ல சின்னத்திரை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொலைக்காட்சித் தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 
 
தொடர் படப்பிடிப்பு காரணமாக வீட்டிற்கு சென்று வர முடியாத காரணத்தினால் அதே பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் சித்ரா தங்கியுள்ளார். இவருக்கும் ஹேமந்த் ரவி என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 
 
இந்நிலையில் ஹேமந்த் ரவியும் சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை குளிக்க வேண்டும் என்று சித்ரா கூறிவிட்டு, அறையில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவருடன் இருந்த ஹேமந்த் ரவி தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து நரசத் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

அப்படியே கதையை மாத்திடீங்களே டா

கணவர் சதீஷுடன் நடிகை ஹேமா

 
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் இன்னொரு நடிகை ஹேமா கணவர் சதீஷ் என்பவர சித்ரா மரணம் தொடர்பான பல வேதனையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
 


அந்த வகையில், தற்போது அப்படியே கதையை மாத்திடீங்களே டா என்று கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நேற்று வரை, குளிக்க வேண்டும், வெளியே செல்லுங்கள் என்று சித்ரா சொன்னதாக தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று காரில் முக்கியமான பொருள் ஒன்றை மறந்து வைத்துவிட்டேன் போய் எடுத்துட்டு வாங்க என்றுசித்ரா கூறியதாக புதிதாக கதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
 

மீடியா, போலீஸ், அரசியல் வாதிகள்


மேலும், காசு குடுத்தா எப்படி வேணும்னாலும் செய்தி போடுவோம் என சொல்லும் மீடியா இருக்கும் வரை,காசு கொடுத்தா எப்படினாலும் கேஸ் எழுதுவோம்னு சொல்லுற போலீஸ் இருக்க வரைக்கும், எனக்கு தெரிஞ்சவன் தப்பே பண்ணாலும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்லுற அரசியல் வாதிகள் இருக்கும் வரைக்கும் இந்த நாடு வாழ்வதற்கு ஏற்ற நாடு அல்ல. என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
 

இதன் மூலம் இந்த விவகாரத்தில் பல திருபுகள் நடந்துள்ளது என தெரிய வருகின்றது. மேலும், இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் பின்புலமாக இருக்கிறார்களோ என்ற ஐயமும் எழுகின்றது. 
 
இதன் வெளிப்பாடாகவே இவரது இப்படியான கருத்துக்கள் இருக்க முடியும். சித்ராவின் மரணத்தில் சந்தேகங்கள் வலுத்துக்கொண்டே போகும் நிலையில் இந்த விவகாரம் எங்கே போய் முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஆனால், மகிழ்ச்சியாக, ஒரு சின்ன குழந்தை போல ஆடி பாடி வாழ்ந்த ஒருவர், மனோ தத்துவம் படித்த ஒருவர்.., இப்படி தற்கொலை செய்துகொண்டார் என்றால் குழந்தை கூட நம்பாது. இதன் பின் இருக்கும் மர்மத்தை உடைத்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

"நேத்து ஒன்னு சொன்னாங்க.. இன்னிக்கு ஒன்னு சொல்றாங்க.." - எது உண்மை..! - நடந்தது என்ன..? "நேத்து ஒன்னு சொன்னாங்க.. இன்னிக்கு ஒன்னு சொல்றாங்க.." - எது உண்மை..! - நடந்தது என்ன..? Reviewed by Tamizhakam on December 09, 2020 Rating: 5
Powered by Blogger.