நடிகை சித்ரா மரணம் - போலீஸில் கணவர் ஹேம்நாத் கூறிய திடுக்கிடும் தகவல்..!


சின்னத்திரை நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைகாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி வெளியாகி சின்னத்திரை உலகையே உலுக்கிவருகிறது.
 
2018-ம் ஆண்டு முதல் ஒரு தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
 

சித்ரா - ஹேமந்த் ரவி

 
ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபருடன் சித்ராவுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. தற்கொலை செய்து கொண்ட இரவு இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்கள். 4 மாதங்கள் முன்பு ஹேமந்த்துடன் சித்ராவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. 
 
 
அவரும் இந்த ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்துள்ளார்.நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் சித்ரா. ஹோட்டலுக்கு வந்தவுடன் தான் குளிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹேமந்தை வெளியே நிற்கவைத்து விட்டு அறையின் கதவை மூடிக் கொண்டார். 
 

பிணமாக சித்ரா

 
ஹேம்நாத் அறையின் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். பிறகு கதவை தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை. எனவே ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். 
 
 
அங்கு சித்ரா புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் , சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

 ஹேம்நாத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 
இதற்கிடையில் தற்போது பொதுமக்கள் நம்பிக்கைக்கு மாறாக அவர்கள் நிச்சயதார்த்தம் செய்ததோடு மட்டுமல்லாமல் அக்டோபர் 19 அன்று பதிவு செய்யப்பட்ட திருமணத்தையும் நடத்தினர் என்பதையும் ஹேமந்த் வெளிப்படுத்தியுள்ளார்.
 

தனது திருமணம் விரைவில் நடைபெறும் என்று சித்ரா தனது சமூக ஊடக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார், ஆனால் அவரது வருங்கால கணவர் ஏற்கனவே அவர்களின் திருமணம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறியுள்ளார்.
 
சித்ராவின் மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய ஹேமந்த் குமாரின் அறிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஆர்.டி.ஓ விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

சமூக வலைத்தளத்தில் ஆதாரம்

 
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு கவலையோ, சோகமோ வெளிப்படவில்லை. அவரது செல்போனும் ஆய்வு செய்யப்படுகிறது.
 

உடலில் காயம் - பகீர் தகவல்

 
சித்ராவின் கன்னத்திலும் உடம்பிலும் இருந்த காயங்கள் அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. நேற்று இரவு ஆரோக்கியமாக உடலில் எந்த காயமும் இன்றி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன் உடலில் காயம் ஏற்படுத்திக்கொள்ள காரணம் என்ன.?
 
சித்ராவின் கன்னத்தில் இருந்த காயம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே வாக்கு வாதம் அல்லது சண்டை ஏதாவது நடந்ததா..? நிஜமாகவே அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா..? என்ற பல கேள்விகள் வலுவாக எழுகின்றன.  
 
இதனை தொடர்ந்து அவருடன் அறையில் தங்கியிருந்த வருங்கால கணவரான ஹேம்நாத்திடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை சித்ரா மரணம் - போலீஸில் கணவர் ஹேம்நாத் கூறிய திடுக்கிடும் தகவல்..! நடிகை சித்ரா மரணம் - போலீஸில் கணவர் ஹேம்நாத் கூறிய திடுக்கிடும் தகவல்..! Reviewed by Tamizhakam on December 09, 2020 Rating: 5
Powered by Blogger.