காரில் கை கட்டி படுத்திருக்கும் VJ சித்ரா - பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!


` பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா, நேற்று அதிகாலை ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 
 
அவரின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. அதனால் நடிகை சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த காதல் கணவர் ஹேமந்த்திடம் நசரேத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 
 
விசாரணையில் அறையை விட்டு தன்னை வெளியில் அனுப்பிவிட்டு சித்ரா, தற்கொலை செய்துக் கொண்டார் என்ற தகவலை ஹேமந்த் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கடும் அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். 
 
ஆனால், நடிகை சித்ராவின் நலம்விரும்பிகள், ரசிகர்கள் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்று கூறினர். இந்தநிலையில் நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரின் மரணத்துக்கான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீஸாரும் சித்ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் காத்திருந்தனர். 
 
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று முற்பகலில் சித்ராவின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இன்னும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகத நிலையில், காவல் துறையினர் இவர் தற்கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். 
 
இது ஒரு பக்கம் இருந்த நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் VJ சித்ராவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், காரில் சரண்யாவின் மடியில் நடிகை சித்ரா கைகட்டி படுத்து தூங்கி கொண்டிருக்கிறார். இதோ அந்த வீடியோ,
 


காரில் கை கட்டி படுத்திருக்கும் VJ சித்ரா - பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..! காரில் கை கட்டி படுத்திருக்கும் VJ சித்ரா - பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.