நகைக்கடை விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? - இளசுகளை வாயை பிளக்க வைத்த நடிகை ப்ரியா ஆனந்த்..!
தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆதித்ய வர்மா மற்றும் சுமோ படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிவாவுடன் வணக்கம் சென்னை படத்தில் நடித்திருந்தார்.
படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய, ஏனோதானோனு நிறைய படங்கள் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. எது வொர்க் அவுட் ஆகும் ஆகாதுனு என்னால கணிக்க முடியுது.
ஆரம்ப காலங்களில் சில காரணங்களுக்காக எனக்கு வரும் எல்லா படங்களுக்கும் ஓகே சொல்லியிருக்கேன். நான் எவ்ளோ இடைவெளி விட்டு படம் பண்ணாலும் மக்கள் என்னை என்கரேஜ் பண்றாங்க.
அதை `எல்.கே.ஜி’ படத்துல உணர்ந்தேன். ரெண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்ல `எல்.கே.ஜி’ படத்துல நடிச்சேன். அதுக்கு எனக்கு கிடைச்ச வரவேற்பைப் பார்த்து தியேட்டர்ல கண்கலங்கிட்டேன்.
நிறைய பெரிய நடிகர்கள் கூட நடிச்சாத்தான் இந்த மாதிரி ரெஸ்பான்ஸ் இருக்கும். ஆனா, எனக்கு அது எதுவும் இல்லாமல் இந்தளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது ரொம்ப சந்தோசம். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணாதான் ஹீரோயின்னு கிடையாது.
பேமிலி ஆடியன்சுக்குப் பிடிக்கிற மாதிரி தரமான படங்கள்ல மட்டும்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.
இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். கவர்ச்சிக்கு வயது வரம்பு என்பதே கிடையாது என ஓபனாக பேசியுள்ளார்.
தற்போது, இவரது கையில் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லையென்றாலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி லைக்குகள் குவித்து வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள், நகைக்கடை விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? என சிலாகித்து வருகிறார்கள்.
நகைக்கடை விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? - இளசுகளை வாயை பிளக்க வைத்த நடிகை ப்ரியா ஆனந்த்..!
Reviewed by Tamizhakam
on
January 27, 2021
Rating:
