"நான் நீரின் குழந்தை.." - பெட் ரூமில் இருந்து நீச்சல் குளம் வரை பிகினி உடையில் மாளவிகா..! - வைரல் போட்டோஸ்..!

 
உன்னைத்தேடி, திருட்டுப்பயலே படங்களில் நடித்த மாளவிகா தற்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. 
 
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கார்த்திக், அஜித், முரளி போன்ற பிரபல நாயகர்களுடன் நடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற ‘வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாடல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. 
 
பின்னர் ‘திருட்டுப்பயலே’ உள்பட பல படங்களில் நடித்தார்.2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகும் நடிப்பேன் என்றார். பின்னர் ஒரு சில படங்களில் தலைகாட்டினார். 
 
மாளவிகா பற்றி நீண்ட நாட்களாக எந்த தகவலும் இல்லை. தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்தி விட்டார்.
 
 
ஆனாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது பிகினி உடையில் படுக்கையறையில் இருந்தபடியும், நீச்சல் குளத்தில் இருந்தபடியும் போஸ் கொடுத்து நான் நீரின் குழந்தை என கூறியுள்ளார்.


மாளவிகாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து கவிதை எழுதி வருகிறார்கள்.