அழகிய மாலைப்பொழுது - மொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் - வைரலாகும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள்..!

 
சின்னத் திரை ஸ்டார்களில் முக்கியமானவர் நம்ம ஸ்ரீதேவி. பெரிய திரை ஸ்ரீதேவி போல முற்றிலும் ஹீரோயினாக மட்டும் இல்லாமல், வில்லி கதாபாத்திரத்திலும் பட்டையைக் கிளப்புவதில் இந்த சின்னத்திரை ஸ்ரீதேவி சூப்பர்தான். 
 
நிறைய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், ‘தங்கம்’ சீரியலின் ரமா என்கிற கேரக்டர்தான் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்ததாம்.தமிழில் பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. 
 
தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘நிலா’ சீரியலில் வில்லி நீலாம்பரியின் சகோதரி வெண்மதியாகவும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியலில் மெயின் வில்லியாக, ரத்னாவாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
 
இதற்கு முன், ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டியிருந்தார்.  2008-ல் சீரியலுக்கு வந்த அவர், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து முடித்த பிறகு, ‘செல்லமடி நீ எனக்கு’ சீரியலின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 
 
அதனைத் தொடர்ந்து ’தங்கம்’, ’இளவரசி’, ’பிரிவோம் சந்திப்போம்’, ’வாணி ராணி’, ’ராஜா ராணி’, ’கல்யாண பரிசு’ உள்ளிட்ட பல தொடர்களில் பாஸிட்டாவாகவும், நெகட்டிவாகவும் நடித்துள்ளார்.
 
 
ஆனாலும், ஸ்ரீதேவி நடித்த நெகட்டிவ் ரோல்கள் தான் ரசிகர்களிடம் அவரை அடையாளப்படுத்தின. படிப்பிலும் ஆர்வம் கொண்டவரான ஸ்ரீதேவி, எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்திருக்கிறார். 
 
சி.ஐ.டி-யாக வேண்டும் என்பது தான் ஸ்ரீதேவியின் பெரிய லட்சியமாம். அதோடு செல்லப் பிராணிகளை பாதுகாக்கும் துறையிலும் பணியாற்றி வருகிறார். அப்படி அனிமல் ரெஸ்கியூ டீமில் இருந்த அசோக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்.
 
 
நிறைய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், ‘தங்கம்’ சீரியலின் ரமா என்கிற கேரக்டர்தான் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்ததாம். அவர் யார் என மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் அதுதான். 
 
அந்த சீரியலில் ஐந்து வருடமாக ரம்யா கிருஷ்ணன், சீமா ஆகியோரை சுற்றியே ரமா கதாபாத்திரம் இருக்கும். அதற்குப் பிறகு `கல்யாணப் பரிசு’ சீரியல் ஸ்ரீதேவியின் மனதுக்கு நெருக்கமான சீரியலாம். 
 
 
திருமணம் முடிந்த பிறகு ”இப்படியும் நீ நடிப்பியானு என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு கேட்டார் என் கணவர்’’ முன்பு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டுருந்தார் ஸ்ரீதேவி.
 
சீரியல் மட்டுமில்லாமல் சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அழகிய மாலைப்பொழுதில் மொட்டைமாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அழகிய மாலைப்பொழுது - மொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் - வைரலாகும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள்..! அழகிய மாலைப்பொழுது - மொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் - வைரலாகும் சீரியல் நடிகையின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.