பொண்ண வச்சு இமேஜை சரி பண்ண பாக்குறீங்களா..? - என்ன ஜென்மம் நீங்க - அர்ச்சனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!


பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளராக கலந்து கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பெயரை டேமேஜ் செய்து கொண்ட பிரபலங்களில் அவரும் ஒருவர். 
 
நிகழ்ச்சியில் அன்பு தான் ஜெயிக்கும் என கூறி சக போட்டியாளர்களில் சிலரை மட்டும் சேர்த்துக்கொண்டு ஒரு குருப் ஃபார்ம் செய்து கொண்டு அட்டூழியம் செய்து வந்தார். 
 
மேலும், நண்பர்களுக்காக ஆரி உட்பட பலரையும் எதிர்த்து பேசி வாங்கி கட்டிக்கொண்டார். இதனால், இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இவர் நிஷாவிடம் கூறிய அன்பு ஜெயிக்கும்ன்னு நம்புறியா.? இல்லையா..? என்ற வசனம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ். 
 
இந்நிலையில், தாறு மாறாக கெட்டுப்போன தனது இமேஜை சரி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஒரு விஷயத்தை செய்து ரசிகர்களிடம் மீண்டும் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறார் அம்மணி.
 
இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் டேமேஜ்ஜான தனது பெயரை அந்த டயலாக்கை வைத்து சரி செய்ய முயன்றுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து ஒரு கான்செப்ட் செய்துள்ளார்.
 
அதில் அன்பு தோத்துருச்சும்மா என்று அழும் அர்ச்சனாவுக்கு, வெறும் 67 நாள்ல உன் அன்ப முடிவு பண்ண முடியாது என கூறுகிறார் அவரது மகள் ஸாரா. இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றியுள்ளனர்.
 


பொண்ண வச்சு இமேஜை சரி பண்ண பாக்குறீங்களா..? - என்ன ஜென்மம் நீங்க - அர்ச்சனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..! பொண்ண வச்சு இமேஜை சரி பண்ண பாக்குறீங்களா..? - என்ன ஜென்மம் நீங்க - அர்ச்சனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.