சாய்பல்லவி அடுத்த படத்தில் ஹீரோ யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!
மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான "பிரேமம்" படத்தில் மலர் டீச்சராக சிறிது நேரமே வந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் சாய் பல்லவி.
அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, NGK போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடியுள்ளனர். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த பாடலில் சாய் பல்லவி தனது நடன திறமையை சரியாக வெளிப்படுத்தியிருப்பார். இது போன்று பல வெற்றிக் கதைகளை தன்பக்கம் வைத்துள்ள சாய்பல்லவி காமெடி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பாரா..? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் விரைவில் இதுபற்றிய செய்தி வெளியாகும் என்ற நம்பிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.
ஆம், காமெடி நடிகர் காளி வெங்கட் சத்தமில்லாமல் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாய்பல்லவி அடுத்த படத்தில் ஹீரோ யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!
Reviewed by Tamizhakam
on
February 23, 2021
Rating:
