"வேற லெவல்..." - ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த சாய்பல்லவி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தெலுங்கில் சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் விராட்ட பர்வம். அவருடன் ராணா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. 
 
இந்நிலையில் நேற்று இப்படத்தில் இடம் பெற்றுள்ள கோலு கோலு என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் யதார்த்தமான கிராமத்து பெண் வேடத்தில் காணப்படுகிறார் சாய் பல்லவி. 
 
அதோடு அவரது அதிர்ச்சியூட்டும் மான்டேஜ் காட்சிகளும் இடம் பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதையடுத்து, இந்த படத்தில் சாய்பல்லவியின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு விதமான பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்திருப்பதோடு, ஏற்கனவே தெலுங்கில் அவர் நடித்த பிடா படத்திற்கு இணையான இன்னொரு முக்கியமான படமாக இருக்கும் என்று இந்த டீசரை வைத்தே நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது, வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை. 
 
வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இந்த வருட லிஸ்டில் இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர்.இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
 
இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ் இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், இதன் மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 
இதனை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

"வேற லெவல்..." - ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த சாய்பல்லவி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "வேற லெவல்..." - ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த சாய்பல்லவி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 26, 2021 Rating: 5
Powered by Blogger.