"இந்த மாதிரி க்யூட்டா பனிஷ்மெண்ட் குடுக்குற டீச்சர் யாரவது இருந்த சொல்லுங்க சார்..." - பூர்ணாவை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பூர்ணாவை சமீபத்தில் ஒரு கும்பல் திருமண சம்பந்தம் பேசி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். 
 
இந்த நிலையில் பூர்ணா இதுகுறித்து பேசுகையில், எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். இதற்காக மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது இந்த மோசடி கும்பல் எங்களை பெண்கேட்டு அணுகியது. 
 
இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். என்னை மணக்க இருந்தவரும் நானும் திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினோம். அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை மாறிவிட்டது. 
 
அந்த போலிகும்பல் எங்களிடம் அன்பாக பழகி ஏமாற்றினார்கள். அவர்களை நினைத்தாலே எனக்கு அச்சம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எனவே இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். 
 
 
திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயம் வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள நடனத்தில் கவனம் செலுத்துகிறேன். என்று கூறினார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழில் விசித்திரன் படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார். 
 
 
இந்தநிலையில் தெலுங்கில் உருவாகும் 'த்ரிஷ்யம்-2'வில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூர்ணா. மலையாளத்தில் த்ரிஷ்யம்-2, கடந்த மாதம் வெளியாகி வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து வெங்கடேஷ்-மீனா நடிப்பில் தெலுங்கிலும் ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு உடனே வெளியானது. 
 
 
இந்தநிலையில் இன்றுமுதல் துவங்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை பூர்ணா கலந்து கொண்டுள்ளார்.இப்படி பரபரப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கம். 
 
 
அந்த வகையில், புடவை, மூக்கு கண்ணாடி, கையில் குச்சி என ஆரம்ப பள்ளி ஆசிரியை போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூர்ணா. 

 
இதனை பார்த்த ரசிகர்கள் இது மாதிரி க்யூட்டான டீச்சர் யாரவது இருந்தா சொல்லுங்க என மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

"இந்த மாதிரி க்யூட்டா பனிஷ்மெண்ட் குடுக்குற டீச்சர் யாரவது இருந்த சொல்லுங்க சார்..." - பூர்ணாவை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "இந்த மாதிரி க்யூட்டா பனிஷ்மெண்ட் குடுக்குற டீச்சர் யாரவது இருந்த சொல்லுங்க சார்..." - பூர்ணாவை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.