சர்ச்சையான கதையில் தங்கையை களமிறக்கிய சாய்பல்லவி..! - முதல் படமே இப்படியா..!?


மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ககாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகத்துக்குள் நுழைந்த நடிகை சாய் பல்லவி, விரைவிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் வாய்ப்புகள் குவிய பிஸியாகிவிட்டார். 
 
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் உடன் மாரி 2 படத்திலும், சூரியா உடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். ஒரு நடிகையாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்ட சாய் பல்லவி மருத்துவம் படித்தவர். 
 
சினிமாவில் பிஸியாக் இருப்பதால் அவரால் மருத்துவம் செய்ய முடியவில்லை. இவருடைய மிகவும் எளிமையான தோற்றம் இளைஞர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
இந்நிலையில், இவரின் தங்கை பூஜாவும் அக்கா வழியில் நடிகையாக களமிறங்கி உள்ளார். இயக்குனர் விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் ஒரு படத்தில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 
 
சமீபத்தில், நாட்டையே உலுக்கி பெரும் சர்ச்சையான பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராகி வருகிறது. கோவையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர், விஜய்யிடம் உதவி இயக்குனராக பூஜா வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படி முதல் படத்திலேயே சர்ச்சையான கதையம்சம் கொண்டபடத்தில் தனது தங்கையை களமிறக்கியுள்ளாரே சாய்பல்லவி என்று வியக்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

சர்ச்சையான கதையில் தங்கையை களமிறக்கிய சாய்பல்லவி..! - முதல் படமே இப்படியா..!? சர்ச்சையான கதையில் தங்கையை களமிறக்கிய சாய்பல்லவி..! - முதல் படமே இப்படியா..!? Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.