தனிமையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..! - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார். 
 
கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் பிரபாஸின் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பரான Santanu உடன் புதிய பாடல் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த கிராக் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். 
 
இந்த படத்தை முடித்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனிடையே ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்தார். 
 
அப்போது சினிமாவுக்கு இடைவெளிவிட்டு காதலுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வந்தார். ஆனால் இருவரும் ஆளுக்கொரு நாட்டில் இருப்பதால் காதலை தொடரமுடியாமல் போனது. 
 
ஸ்ருதி எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ருதி நான் காதலில் இருக்கிறேன் என்று கூறினார். 
 
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது 35வது பிறந்தநாளை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டன. 
 

அதில் ஸ்ருதி, தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது ஸ்ருதியின் புதிய காதலரா என கேள்வி கேட்டு ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

தனிமையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..! - ரசிகர்கள் ஷாக்..! தனிமையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.