நயன்தாரா மாதிரி வரனும்னா இதை பண்ணித்தான் ஆகணும் - ப்ரியா பவானி ஷங்கர் எடுத்த முடிவு..!
தமிழ் சினிமாவில் அடுத்த நயன்தாரா என அழைக்கப்படும் பிரியா பவானி சங்கர் நயன்தாராவாக மாற புதிய ரூட்டை கையில் எடுத்துள்ளாராம். அதுக்குள்ள எதுக்கு இவருக்கு இந்த வேலை என கோலிவுட் வட்டாரங்களில் இப்போதே பேச்சுக்கள் எழுந்துள்ளன.
நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா இடத்தை பிடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அந்த ஆசை சமீபகாலமாக பிரியா பவானி சங்கருக்கும் வந்துவிட்டாதாம்.
இப்போதைக்கு கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் தமிழ் நடிகை இவர்தான். ஏற்கனவே 10 படங்களில் நடித்து முடித்துவிட்டு, தற்போது கைவசம் 5 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். பார்த்த உடனே பிடித்துப் போகும் அழகியாக வலம் வரும் ப்ரியா பவானி சங்கர் முதல் முறையாக ஒரு ரிஸ்க் எடுக்க உள்ளாராம்.
இதுவரை கமர்சியல் நாயகியாக வலம் வந்த பிரியா பவானி சங்கர் அடுத்ததாக கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை நயன்தாராவின் ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் என்பவர் இயக்கவுள்ளார்.
சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மெட்ரோ சிரிஸ் நடிக்க உள்ளார். இந்த படம் மட்டும் ஒர்க்கவுட்டானால் இனிமேல் நயன்தாராவை போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
ஏற்கனவே அடுத்த நயன்தாரா என ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் நயன்தாராவின் ரூட்டை கையில் எடுத்தால் விரைவில் அவரையே ஓரங்கட்டி விடுவார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
நயன்தாரா மாதிரி வரனும்னா இதை பண்ணித்தான் ஆகணும் - ப்ரியா பவானி ஷங்கர் எடுத்த முடிவு..!
Reviewed by Tamizhakam
on
April 06, 2021
Rating:
