முதன் முறையாக நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் தொகுப்பாளினி அனசுயா..!

 
1979ல் ‘வண்டிச்சக்கரம்’ பட மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. கமல் & ரஜினி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்தவர். 
 
இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போதே அது மிகப்பெரிய சர்ச்சையானது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை வித்யா பாலனை வைத்து ‘தி டர்ட்டி பிக்சர்’ என்கிற பெயரில் ஹிந்தியில் உருவாக்கினர். 
 
அந்த படமும் நன்றாக பேசப்பட்டது. ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தவறாக காண்பித்தனர் என்று விமர்சனம் எழுந்தது. ஆனாலும் வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க நடிகர் வினு சக்ரவர்த்தி முயற்சித்தார். 
 
ஆனால் அது பேச்சோடு நின்றது. நடக்கவில்லை. இந்நிலையில் சில்க் வாழ்க்கை படம் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட புகழ் மணிகண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார். 
 
பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினியும் தெலுங்கு நடிகையுமான அனசுயா பரத்வாஜ் தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன. ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் அனசுயா. 
 
காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். அண்மையில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் புதிய தொடக்கம்.. கோலிவுட் என கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. 


இதனை தொடர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமாகி விட்ட இவர் அந்த பிரபல்யத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்..

முதன் முறையாக நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் தொகுப்பாளினி அனசுயா..! முதன் முறையாக நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் தொகுப்பாளினி அனசுயா..! Reviewed by Tamizhakam on May 26, 2021 Rating: 5
Powered by Blogger.