விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் மீண்டும் கணவருடன் சேர்ந்த பிரியா ராமன்..! - வைரல் புகைப்படம்..!

 
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்த எத்தனையோ நடிகைகள் தற்போது சினிமாவில் ரீ – என்ட்ரியை தூங்கினாலும் ஒரு சில நடிகர் நடிகைகள் தற்போது சின்னத்திரை பக்கம் வந்துவிட்டனர். அந்த வகையில் பிரியா ராமனும் ஒருவர். 
 
தமிழில் 1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். 
 
அதன் பின்னர் இவர் தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்தார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. ஆனால், மலையாளத்தில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.
 
தமிழில் இவர் அறிமுகமான வள்ளி திரைப்படம் வெற்றிபெறவில்லை. ஆனால், இவர் சூர்யவம்ஸம் படத்தில் சரத்குமாரின் காதலியாக நடித்திருப்பார். அந்த படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. 
 
இறுதியாக இவர் நேசம் புதிது படத்தில் நடித்து இருந்தார் அதன் பின்னர் இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் பின்னர் சீரியல்களில் கவனம் செலுத்தினார். 
 
 
திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
 
நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். 
 
தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி இருவரும் வாழ்த்துக்களை கூறிக் கொண்டுள்ளனர். 


திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் மீண்டும் கணவருடன் சேர்ந்த பிரியா ராமன்..! - வைரல் புகைப்படம்..! விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் மீண்டும் கணவருடன் சேர்ந்த பிரியா ராமன்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 18, 2021 Rating: 5
Powered by Blogger.