சீரியலில் குடும்ப குத்து விளக்காக... தோன்றும் "கண்ணான கண்ணே" நடிகையா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நிமிஷிகா. பொதுவாகவே சீரியல் நடிகைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. அதிலும் இளைஞர்கள் சில சீரியல் நடிகைகளுக்கு ஆர்மி, நேவி என்றெல்லாம் துவங்குவதையும் பார்க்க முடிகிறது.
 
கடந்த ஆண்டு தொடங்கிய கண்ணான கண்ணே சீரியலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். பப்ளு, டெல்னா டேவிஸ், நித்யா தாஸ், பிரியங்கா நல்கரி, ரேஷ்மா, நித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகை நிமிஷிகா கண்ணான காணே சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நிமிஷிகா, தற்போது கண்ணான கண்ணே சீரியல் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
 
 
கடைக்குட்டி சிங்கம் சீரியல் தொடரில் பகல் நிலவு சீரியலில் நடித்த முஹம்த் அஸீம் மற்றும் கண்மணி சீரியலில் நடித்த இரா அகர்வால் இருவரும் மருது மற்றும் மீனாட்சி என்ற காதாபாத்திரத்தில் நடித்தனர். அண்ணன் முத்து கதாபாத்திரத்தில் வேலு லட்சுமணன் என்ற புதுமுக நடிகர் நடித்தார். அது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். 
 
முத்து, மருது என்ற இரு பாசக்கார அண்ணன் தம்பிகளுக்குள் மீனாட்சி என்னும் அழகான பெண் வரும்போது நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகர்ந்தது. 20 ஜூலை 2019ம் ஆண்டு அன்று 113 எபிசோட்ஸ்சுடன் இந்த சீரியல் நிறைவு பெற்றது.
 
நிமிஷிகா கண்ணான கண்னே சீரியலில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மிகவும் கவர்ச்சியான பபுகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நிமிஷிகா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக... தோன்றும் "கண்ணான கண்ணே" நடிகையா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! சீரியலில் குடும்ப குத்து விளக்காக... தோன்றும் "கண்ணான கண்ணே" நடிகையா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.