அடுத்தடுத்து லீக் ஆகும் சீரியல் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள்..! கண்ணான கண்ணே நிமேஷிகா பகீர் தகவல்..!
கடந்த இரண்டு நாட்களாக தமிழ் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆடிஷன் என்ற பெயரில் பட வாய்ப்பு தருவதாக கூறி, வீடியோ காலில் அந்தரங்கத்தை வெளிப்படுத்தவும், செய்யக்கூடாத செயல்களை செய்யும்படியும் ஒரு நபர் கேட்க, அதற்கு அந்த நடிகைகள் உடன்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சிறகடிக்க ஆசை" சீரியல் நடிகையை தொடர்ந்து, மேலும் ஒரு சீரியல் நடிகையின் வீடியோ வெளியாகி இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களை யார் வெளியிடுவது, எப்படி அடுத்தடுத்து நடிகைகளின் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளன. இந்நிலையில், "கண்ணான கண்ணே" சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை நிமோஷிகா, பட வாய்ப்புக்காக படப்பிடிப்பு தளங்களில் நடக்கக்கூடிய அக்கிரமங்கள் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “மீடியாவில் இருப்பதால் இது போன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் பெரிதளவு வெளியே தெரிகிறது. ஆனால், ...