"ஒரு நாளைக்கு எத்தனை முறை பண்ணுவீங்க.." - ரசிகரின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ராஷ்மிகா...!

 
கன்னட திரையுலகில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்குள், தெலுங்கு, தமிழ் மற்றும் தற்போது பாலிவுட் திரையுலகிற்கும் சென்று விட்டார் ராஷ்மிகா. 
 
தனது திறமையான நடிப்பு, கியூட் ரியாக்ஷன்ஸ், அழகு, அளவான கவர்ச்சி என அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி விட்டார். 
 
சமீபத்தில், பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் “டாப் டக்கர்” ஆல்பம் பாடல் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. 
 
மேலும் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் மூலம் அறிமுகமான இவரை, அடுத்தடுத்த பல படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக, கோலிவுட் திரையுலகில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. 
 
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஷ்மிகா தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவே ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். அதற்கு இது தான் காரணமாம்... அதாவது "தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தமிழ் நாட்டின் உணவு வகைகள் அவரை வெகுவாக கவர்ந்து விட்டதாம். 
 

தமிழ் உணவுகளை மிகவும் நேசிப்பதாகவும், அதில் அது அறுசுவை இருக்கிறது. எனவே நான் ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு தமிழ் நாட்டு பெண்ணாக மாறிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடும் இவரிடம், ரசிகர் ஒருவர் புகைப்பிடிப்பது குறித்து சர்ச்சையான ஒரு கேள்வியை எழுப்பினார். 
 
ஒரு நாளைக்கு எத்தனை முறை தம் அடிப்பீர்கள் என்று கேட்க ராஷ்மிகா கூலாக பதில் கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா, நான் புகைப்பிடிப்பதில்லை. புகை பிடிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்வதும் இல்லை என்று கூறியுள்ளார்.

"ஒரு நாளைக்கு எத்தனை முறை பண்ணுவீங்க.." - ரசிகரின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ராஷ்மிகா...! "ஒரு நாளைக்கு எத்தனை முறை பண்ணுவீங்க.." - ரசிகரின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு கூலாக பதில் சொன்ன ராஷ்மிகா...! Reviewed by Tamizhakam on August 25, 2021 Rating: 5
Powered by Blogger.